அமெரிக்க அரசின் மூத்த அதிகாரி ஒருவர் அதிபர் ஜோ பைடன் இந்தியா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக ஆதரவு தெரிவித்துள்ளதாக ஊடகங்களிடம் தெரிவித்தார்.
மேலும் பெயர் வெளியிட விரும்பாத அந்த அதிகாரி இந்த விவகாரம் தொடர்பாக இன்னும் செய்யப்பட வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன, பல்வேறு வகையான கோப்புகளை தயார் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
வரலாற்று ரீதியாகவே இந்தியா ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பா நாடாக இணைவதை அமெரிக்கா ஆதரித்து வருவதாகவும் அவர் ஊடகவியலாளர்களிடம் சுட்டு காட்டினார்.
முன்னதாக ஐக்கிய நாடுகள் பொது சபையில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பாதுகாப்பு சபையை விரிவாக்கம் செய்யும் காலகட்டத்தில் உள்ளதாகவும் அதன் மூலம் உலகின் அனைத்து பிராந்தியங்களை உள்ளடக்கிய ஒரு சபையை உருவாக்க முடியும் எனவும்
ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரத்தை நிலைநாட்ட பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் தற்காலிக உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் மேலும் வீட்டோ போன்ற அதிகாரங்களை மிகவும் இன்றியமையாத சூழல்களில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என பேசியதும் குறிப்பிடத்தக்கது.