உக்ரைனில் சண்டையிட முன்னாள் ஆஃப்கானிஸ்தான் ராணுவ விமானிகளை களமிறக்க அமெரிக்க திட்டம் !!

  • Tamil Defense
  • September 1, 2022
  • Comments Off on உக்ரைனில் சண்டையிட முன்னாள் ஆஃப்கானிஸ்தான் ராணுவ விமானிகளை களமிறக்க அமெரிக்க திட்டம் !!

ஆஃப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைபற்றிய போது அமெரிக்காவுக்கு தப்பி சென்ற பல முன்னாள் ஆஃப்கன் ராணுவ விமானிகளை அமெரிக்கா தற்போது கலிபோர்னியா மாகாணத்தில் பயிற்றுவித்து உக்ரைன் போரில் களமிறக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் துவங்கியதாகவும் தற்போது கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ராணுவ தளம் ஒன்றில் அவர்களுக்கான பயிற்சிகள் துவங்கி நடைபெற்று வருவதாகவும் பின்னர் போலந்து நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து உக்ரைன் அனுப்பி வைக்கப்பட உள்ளனர் என கூறப்படுகிறது.

முன்னாள் ஆஃப்கானிஸ்தான் வீரர்களை தவிர ஆஃப்கானிஸ்தான் தரைப்படையின் சிறப்பு படையான கமாண்டோ கோர் படைப்பிரிவில் பணியாற்றிய முன்னாள் சிறப்பு படை கமாண்டோக்களுக்கும் கூடுதல் பயிற்சிகள் அளித்து உக்ரைனில் களமிறக்க அமெரிக்கா திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.