அமெரிக்க அரசு தைவானுக்கு சுமார் 1.1 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை விற்க முடிவு செய்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல்கள் சீனாவை மிகவும் கடுப்பேற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆயுதங்களில் 60 Harpoon கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், 100 Sidewinder வான் இலக்கு மற்றும் தரை இலக்கு எதிர்ப்பு ஏவுகணைகள் ஆகியவை அடக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 85.6 மில்லியன் டாலர்கள் மதிப்பில் Sidewinder ஏவுகணைகள், 355 மில்லியன் டாலர் மதிப்பில் Harpoon ஏவுகணைகள், கண்காணிப்பு ரேடார்களுக்கான உதவியாக சுமார் 665 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுத விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக DSCA – Defense Security Cooperation Agency அதாவது அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து அமெரிக்காவுக்கான சீன தூதர் லீ பெங்யூ இந்த விற்பனை சீன அமெரிக்க உறவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் மேலும் இந்த விவகாரத்தின் விளைவுகளை எதிர்கொள்ளும் வகையில் சீனாவும் பதில் நடவடிக்கைகளை எடுக்கும் என தெரிவித்தார்.