ரஷ்யாவிலிருந்து ஜெர்மனி செல்லும் எரிபொருள் குழாயில் தாக்குதல் அமெரிக்க கடற்படை நடத்திய ஆபரேஷனா ??

  • Tamil Defense
  • September 28, 2022
  • Comments Off on ரஷ்யாவிலிருந்து ஜெர்மனி செல்லும் எரிபொருள் குழாயில் தாக்குதல் அமெரிக்க கடற்படை நடத்திய ஆபரேஷனா ??

நேற்று ரஷ்யாவிலிருந்து பால்டிக் கடல் வழியாக ஜெர்மனி செல்லும் கடலடி எரிபொருள் குழாயில் இரண்டு மர்ம வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், இவற்றின் சக்தி நிலநடுக்கத்தை அளக்க உதவும் ரிக்டர் அளவுகோலில் 2.3 ஆக பதிவாகி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இரண்டு வெடிப்புகளை டென்மார்க் மற்றும் ஸ்வீடன் கடற்படைகள் உணர்ந்துள்ளன, தொடர்ந்து கடலில் எரிபொருள் குழாயில் மூன்று இடங்களில் இருந்து கசியும் இயற்கை எரிவாயு ஏராளமான அளவில் வெளியேறி வருகிறது.

இது கடலடி தாக்குதல் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில் ஸ்வீடன் காவல்துறை வழக்கு பதிந்துள்ளது, டென்மார்க் மற்றும் போலந்து பிரதமர்கள் இது தாக்குதல் தான் என்பதை உறுதிபடுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த தாக்குதலை அமெரிக்க கடற்படையின் சிறப்பு படை வீரர்கள் குழு மேற்கொண்டு இருக்கலாம் என சந்தேகம் வலுத்து வருகிறது ஃபெப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் பைடன் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தால் இந்த எரிபொருள் இணைப்பை துண்டிப்போம் என எச்சரிக்கை விடுத்த போது அது எப்படி என நிருபர் கேட்டதற்கு நிச்சயமாக செய்வோம் என்று மட்டும் கூறியதும்

இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்து பால்டிக் கடல்பகுதியில் அமெரிக்க கடற்படை போர் கப்பல்கள் நடமாட்டம் மற்றும் கூட்டு பயிற்சிகள் நடைபெற்றது, மேலும் அதிபர் படைனுடன் நெருங்கிய உறவு கொண்ட போலந்து நாட்டை சேர்ந்த ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ரேடக் சிகோர்ஸ்கி நன்றி அமெரிக்கா என பதிவிட்டுள்ளது ஆகியவை பலத்த சந்தேகங்களை கிளப்பியுள்ளன.

உலகின் மிகப்பெரிய கடற்படையான அமெரிக்க கடற்படைக்கு இத்தகைய ஆபரேஷன்களை மேற்கொள்வதற்கான தொழில்நுட்ப திறன்கள் வலுவும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.