இந்தியாவுக்கு ஏன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் கொடுக்கவில்லை உக்ரைன் அதிபர் கேள்வி !!

  • Tamil Defense
  • September 25, 2022
  • Comments Off on இந்தியாவுக்கு ஏன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் கொடுக்கவில்லை உக்ரைன் அதிபர் கேள்வி !!

உக்ரைன் அதிபர் வோலோடீமீர் செலன்ஸ்கி உக்ரைனில் போர் நடைபெற்று வருவதால் ஐக்கிய நாடுகள் பொதுசபை கூட்டத்தில் காணொளி மூலமாக கலந்து கொண்டு பேசினார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவரது உரையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலை விரிவாக்கம் செய்வது குறித்து பேசினார் அப்போது அவர் லத்தீன் அமெரிக்கா, ஆசியாவின் பல பகுதிகள், மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா போன்றவற்றிற்கு பிரதிநிதித்துவம் இல்லை என குறிப்பிட்டார்.

பின்னர் அவர் பாதுகாப்பு கவுன்சிலை விரிவாக்கம் செய்வது குறித்து பேச்சு மட்டுமே நடக்கிறது ஆனால் இதுவரை ஒன்றும் நடக்கவில்லை இந்தியா, ஜப்பான், பிரேசில், துருக்கி, ஜெர்மனி, உக்ரைன் போன்ற நாடுகளுக்கு ஏன் நிரந்தர இடம் வழங்கப்படவில்லை எனவும்,

மேற்குறிப்பிட்ட பிரதிநிதித்துவம் இல்லாத பகுதிகள் நிரந்தர உறுப்பு நாடுகளின் வீட்டோ எனும் அதிகாரத்தை தங்களது தேவைக்கு பயன்படுத்தி கொள்ள முடியவில்லை எனவும் கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு ஒரு நாள் இந்த நிலை மாறும் என தெரிவித்தார்.