ரஷ்யாவின் சாகி ராணுவ தளம் மீதான தாக்குதலுக்கு பொறுபேற்ற உக்ரைன் !!
சமீபத்தில் உக்ரைனிடம் இருந்து ரஷ்யா கைபற்றிய க்ரைமியா பகுதியில் அமைந்துள்ள சாகி விமானப்படை தளம் மீது தொடர்ந்து பலத்த தாக்குதல் நடத்தப்பட்டது இந்த தாக்குதலில் ரஷ்யா பலத்த இழப்புகளை சந்திக்க நேரிட்டது.
உக்ரைன் மீது சந்தேகம் இருந்தாலும் அது நிருபிக்கப்படவில்லை தற்போது உக்ரைன் நாட்டின் முப்படை தலைமை தளபதி வலுரி ஸலெய்சினி மற்றும் உக்ரைன் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை தொடர்பான நாடாளுமன்ற குழுவின் தலைவர் மைகாய்லோ ஆகியோர் உக்ரைன் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறியுள்ளனர்.
ஆகஸ்ட் 9ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உக்ரைன் தற்போது பொறுப்பேற்றுள்ள நிலையில் இத்தனை நாள் ஏன் உக்ரைன் அமைதி காத்தது என்ற கேள்வியும் எழுந்துள்ளது ரஷ்யாவின் தற்காப்பு திறன்களை எளிதாக முறியடித்து விட்டு இந்த தாக்குதல் நடைபெற்றதாக உக்ரைன் அறிக்கை கூறுகிறது.
ஆனால் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் போர் விமானங்களுக்கான ஆயுதங்கள் வைக்கப்பட்டு இருந்த கிடங்குளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாகவே வெடி விபத்து ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.