உக்ரைன் தலைநகர் மீது பறந்த வேற்றுகிரவாசிகள் ??

உக்ரைன் தலைநகர் க்யிவ் மீது வேற்றுகிரவாசிகள் பறந்ததாக அங்கிருந்து செயல்படும் விண்வெளி ஆய்வு மையம் மற்றும் தேசிய அறிவியல் கல்லூரி ஆகியவை செய்தி வெளியிட்டுள்ளன.

சமீப காலமாக மிகப்பெரிய அளவில் பறக்கும் அமைப்புகள் தென்பட்டு வருவதாகவும் ஆனால் அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் இவை ரஷ்யா மற்றும் சீன தயாரிப்பு ஆளில்லா விமானங்களாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட இரண்டு அமைப்புகளும் இதை பற்றிய அறிக்கையை விரைவில் வெளியிட உள்ளன, அதுபற்றி அந்த அமைப்புகளை சேர்ந்தோர் பேசும்போது அவற்றை பல இடங்களில் பார்க்க முடிவதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.