2024 வாக்கில் சுதேசி கடற்படை இரட்டை என்ஜின் விமானத்திற்கு முக்கிய அனுமதி !!
1 min read

2024 வாக்கில் சுதேசி கடற்படை இரட்டை என்ஜின் விமானத்திற்கு முக்கிய அனுமதி !!

இந்திய கடற்படைக்கென உள்நாட்டிலேயே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டு வரும் போர் விமானம் தான் கடற்படை இரட்டை என்ஜின் போர் விமானம் ஆங்கிலத்தில் TEDBF Twin Engine Deck Based Fighter என அழைக்கப்படுகிறது.

இந்திய கடற்படையின் திட்ட அலுவலகம் மற்றும் வானூர்தி மேம்பாட்டு முகமை ஆகியவை இணைந்து ஆரம்பக்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளன, அந்த வகையில் 2023ஆம் ஆண்டு வாக்கில் முக்கிய அனுமதிகளை பெறவும் திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வானூர்தி மேம்பாட்டு முகமை ADA முதல்கட்ட டிசைன் ஆய்வுகளை PDR Preliminary Design Review வைத்து கொண்டு சுமார் 13000 கோடி ரூபாய் நிதியை பெற விரும்புகிறது, அடுத்தகட்டமாக 2024 அல்லது 2025 வாக்கில் Critical Design Review CDR எனப்படும் முக்கிய டிசைன் ஆய்வை நடத்த அனுமதி பெறவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

அதை தொடர்ந்து தயாரிப்பு பணிகள் துவங்கும் பின்னர் 2025 அல்லது 2027ஆம் ஆண்டு வாக்கில் முதல் பறக்கும் சோதனை நடைபெறும் 2031-2032 வாக்கில் முழு அளவிலான தயாரிப்பு பணிகள் துவங்கும், இந்திய கடற்படை இத்தகைய 42 TEDBF போர் விமானங்களை படையில் இணைக்க விரும்புவது குறிப்பிடத்தக்கது.

TEDBF கடற்படை இரட்டை என்ஜின் போர் விமானத்தில் தேஜாஸ் மார்க் – 2 Tejas Mk2 மற்றும் ஆம்கா AMCA போர் விமானங்கள் ஆகியவற்றிற்காக உருவாக்கப்பட்ட பல தொழில்நுட்பங்கள் மற்றும் இதர அமைப்புகள் பயன்படுத்தப்பட உள்ளன, 26 டன்கள் எடை கொண்ட இந்த விமானத்தில் ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பங்கள் இருக்கும் என்பது கூடுதல் சிறப்பாகும்.