இந்திய சீன பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்; லடாக்கில் படைவிலக்க நடவடிக்கை ஆரம்பம் !!

  • Tamil Defense
  • September 9, 2022
  • Comments Off on இந்திய சீன பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்; லடாக்கில் படைவிலக்க நடவடிக்கை ஆரம்பம் !!

சமீபத்தில் இந்தியா மற்றும் சீன ராணுவ அதிகாரிகள் இடையே நடைபெற்ற 16ஆவது சுற்று பேச்சுவார்த்தைகளில் சற்றே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது கோக்ரா ஹாட்-ஸ்ப்ரிங்கஸ் (PP-15) பகுதியில் முதல்கட்டமாக படைகளை இருதரப்பும் விலக்கி கொள்வதாக முடிவு செய்யப்பட்டு உள்ளது, அதன்படி அதற்கான பணிகள் துவங்கி உள்ளன.

இதுபற்றி இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த படைலிலக்க நடவடிக்கைகள் மூலமாக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்படும் என நம்புவதாகவும், மிகுந்த ஒருங்கிணைப்போடு இது நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.

1962ஆம் ஆண்டு போருக்கு பிறகு கல்வான் மோதல் நடைபெற்ற பிறகு தான் இந்திய சீன எல்லை பெரும் பதட்ட நிலையில் இருந்ததும், சுமார் 45 ஆண்டுகளுக்கு பிறகு எச்சரிக்கும் விதமாக துப்பாக்கி சூடு நடைபெற்றதும் கூடுதல் தகவல் ஆகும்.