இந்தியா சீனா இடையே ஆயுத போட்டி இல்லை ஆனால் மேற்குலக நாடுகள் சண்டை மூட்டுவதாக சீனா குற்றச்சாட்டு !!
1 min read

இந்தியா சீனா இடையே ஆயுத போட்டி இல்லை ஆனால் மேற்குலக நாடுகள் சண்டை மூட்டுவதாக சீனா குற்றச்சாட்டு !!

சீன அரசின் ஆதரவு பெற்ற ஊடகமான க்ளோபல் டைமஸ் Global Times சமீபத்தில் இந்தியா விக்ராந்த் விமானந்தாங்கி போர் கப்பலை படையில் இணைத்ததை முன்னிட்டு ஒரு கட்டுரை ஒன்றை வெளியிட்டது அதனை எழுதியவர் யு நிங் என்பவர் ஆவார்.

அந்த கட்டுரையில் இந்தியா சொந்தமாக வடிவமைத்து கட்டமைத்த INS Vikrant விக்ராந்த் விமானந்தாங்கி போர் கப்பலை படையில் இணைத்ததற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் இந்தியா சீனா இடையோ ஆயுத போட்டி எதுவும் இல்லை எனவும், இந்தியாவை சீனா எதிரியாகவோ அல்லது ஆபத்தாகவோ கருதவில்லை எனவும் சீனா தனது நலன்களை முன்னிட்டே தனது ராணுவ பலத்தை அதிகரித்து வருவதாகவும்

ஆனால் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் இந்தியா சீனா இடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இரு நாடுகள் இடையே போரை தூண்டி விட திட்டமிட்டு செயல்படுவதாகவும்

மேலும் மேற்குலக நாடுகளிலும் சரி இந்தியாவிலும் சரி இந்தியா வளர்ச்சி அடைவதை சீனா விரும்பவில்லை எனும் மேம்போக்கான கருத்து நிலவுகிறது இது முற்றிலும் தவறானது அடிப்படை ஆதாரமற்ற கருத்து எனவும்,

சீனாவும் இந்தியாவும் பொருளாதார மற்றும் சமுக வளர்ச்சியை விரும்பும் நாடுகள் இரண்டு நாடுகள் இடையே பொதுவான பல நலன்கள் உள்ளன இவை வேறுபாடுகளை விடவும் வலிமையானவை என கூறப்பட்டுள்ளது.

கடைசியாக இந்தியா மேற்குலக நாடுகளின் தேன் ஒழுகும் வார்த்தைகளில் மயங்கி விடாமல் தன் நிலையை மறக்காமல் சுயமாக சிந்தித்து செயல்படும் என நம்புவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.