பயங்கரவாதியை சரணடைய கோரிய ராணுவம், ராணுவத்தை புகழ்ந்துவிட்டு சரணடைய மறுத்து மரணமடைந்த பயங்கரவாதி !!
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் காஷ்மீர் பிராந்தியத்தில் குல்காம் அருகேயுள்ள அஹ்வாத்தூ எனும் பகுதியில் இரண்டு பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்து தகவலையடுத்து பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது ஒரு வீட்டில் குல்காம் அருகேயுள்ள பட்டபோரா கிராமத்தை சேர்ந்த மொஹம்மது ஷாஃபி கனாய் மற்றும் குல்காம் அருகேயுள்ள டாகியா கோபால்போரா பகுதியை சேர்ந்த மொஹம்மது ஆசிஃப் வானி ஆகிய இரண்டு ஜெய்ஷ் இ மொஹம்மது அமைப்பின் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் ராணுவ அதிகாரி ஒருவர் பயங்கரவாதி ஷாஃபி கனாயின் மொபைல் போனில் வீடியோ கால் மூலமாக தொடர்பு கொண்டு பேசினார் அப்போது ஷாஃபி கனாய் காஷ்மீரத்தை ராணுவம் பார்த்து கொள்வதாகவும் அதனால் காஷ்மீரிகளுக்கு ராணுவத்தை பிடித்துள்ளதாகவும் ராணுவத்தை புகழ்ந்து பேசினான்.
அப்போது அந்த தரைப்படை அதிகாரி நானும் ராணுவத்தை சேர்ந்தவன் தான் தயவுசெய்து இருவரும் சரணடையுங்கள் என வேண்டுகோள் விடுத்தார் அதற்கு ஷாஃபி இல்லை நான் மரணத்தை நெருங்கி விட்டேன் எப்படியும் என்னை சுட்டு கொன்று விடுவீர்கள் முன்று முறையே அல்லது ஒரு மேகஸின் காலியாகும் வரையோ சுட்டு கொல்லப்படுவேன் என பதிலளித்தான்.
அதற்கு மீண்டும் ராணுவ அதிகாரி இல்லை நண்பா நாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோம் என உறுதி அளித்தார் எனினும் பயங்கரவாதிகள் சரணடைய மறுத்து வீடியோ காலை துண்டித்தனர் பின்னர் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் இருவரும் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.