உலகின் பணக்கார கோயிலான கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயில் அருகே உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த இருவர் முடி திருத்தும் கடை ஒன்றை நடத்தி வந்தனர், இவர்களை ராணுவ உளவுத்துறை பயங்கரவாத தொடர்புகள் காரணமாக கைது செய்துள்ளது.
இவர்கள் ஒரு வாடிக்கையாளரின் தொலைபேசி எண்ணை பயன்படுத்தி அவருக்கே தெரியாமல் வாட்சாப் கணக்கை துவங்கி உள்ளனர் இந்த நிலையில் தனது எண்ணில் வாட்சாப் கணக்கு இருப்பதும் முகப்பு படத்தில் DP பாகிஸ்தான் ராணுவ புகைப்படம் இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக செப்டம்பர் மூன்றாம் தேதியன்று காவல்நிலையத்தில் சென்று புகார் அளித்தார், இதனையடுத்து ராணுவ உளவுத்துறையும் இவர்களை கண்காணித்து வந்த நிலையில் மாநில காவல்தறையுடன் சேர்ந்து ஷாருக் அலி மற்றும் மொஹம்மது ஹாசன் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.
இவர்கள் இருவரும் தங்களது திருட்டு வாட்சாப் கணக்கில் உள்ள அனைத்து விவரங்களையும் அழித்துவிட்ட நிலையில் உள்நாட்டு உளவுத்துறையான IB மற்றும் ராணுவ உளவுத்துறை ஆகியவை இணைந்து அந்த தகவல்களை எடுக்க முயற்சி செய்து வருகின்றனர் மேலும் இவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
அதே போல் கடந்த 2ஆம் தேதி கேரளாவில் உள்ள ராணுவ தளம் ஒன்றின் மீதும் பத்மநாபசுவாமி கோயில் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த சாதிக் பாஷா மற்றும் மிர் அனாஸ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர், இவர்கள் இருவரும் ஒரு பெண்ணால் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
தற்போது இவர்களையும் அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில் கேரளா மீது பயங்கரவாதிகளின் பார்வை திரும்பி உள்ளதும் பத்மநாபசுவாமி கோயில் இலக்காக மாறி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.