பிரதமர் தலைமையிலான மத்திய கேபினட் அமைச்சர்கள் ஆகியோர் அடங்கிய பாதுகாப்புக்கான கேபினட் கவுன்சில் தேஜாஸ் 2.0 அதாவது தேஜாஸ் மார்க்-2 போர் விமானத்தை தயாரிக்கும் மெகா திட்டத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது.
ஏற்கனவே இந்த தேஜாஸ் மார்க்-2 திட்டத்திற்கு 2500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் 6500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இப்படி ஒட்டுமொத்தமாக ஒதுக்கப்பட்டுள்ள சுமார் 9000 கோடி ரூபாயை சோதனை வடிவம், விமான சோதனை, சான்றிதழ் பெறுதல் போன்றவற்றிற்கு செலவிட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தேஜாஸ் மார்க்-2 Tejas Mk-2 ஒரு நடுத்தர எடையிலான (MWF – Medium Weight Fighter) பல திறன் போர் (Multi Role) விமானம் ஆகும் (Medium Weight Multi Role Fighter) ஆனால் தேஜாஸ் மார்க்-1 Tejas Mk-1 இலகுரக போர் விமானம் (LCA Light Combat Aircraft) என்பதும் இரண்டையும் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் HAL Hindustan Aeronautics Limited நிறுவனம் தான் தயாரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தேஜாஸ் மார்க்-2 போர் விமானத்தில் மிகவும் சக்தி வாய்ந்த 98 கிலோ நியூட்டன் ஆற்றலை வெளிப்படுத்தும் அமெரிக்க GE 414 ரக என்ஜின்களை பயன்படுத்தும் அதன் காரணமாக இந்த விமானங்களால் அதிக ஆயுதங்களை அதிக தொலைவுக்கு சுமந்து கொண்டு பறக்க முடியும் எனவும் வெளிப்புற எரிபொருள் டாங்க் ஒன்றையும் இனைத்து கொள்ள முடியும் எனவும் கூறப்படுகிறது.
இலகுரக தேஜாஸ் மார்க்-1 போர் விமானம் வான் பாதுகாப்பு பணிக்கானது, ஆனால் அதைவிட பெரிய எடை அதிகமான இந்த நடுத்தர பல திறன் தேஜாஸ் மார்க்-2 போர் விமானமானது அதன் கனரக ஆயுதங்களை கொண்டு எதிரி நாட்டு எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தவும் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே தேஜாஸ் மார்க்-2 போர் விமானத்தின் முக்கியமான டிசைன் சோதனை வெற்றியடைந்த நிலையில் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் முதலாவது பறக்கும் சோதனையை நடத்தவும் 2030ஆம் ஆண்டு வாக்கில் இதன் தயாரிப்பு பணிகளை துவங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
மேலும் ஏற்கனவே Fly by Wire, Avionics, Composites போன்ற பல தொழில்நுட்பங்கள் மற்றும் அமைப்புகள் தேஜாஸ் மார்க்-1 விமானத்தில் வெற்றிகரமாக பயன்படுத்தி வரப்படுவதால் தேஜாஸ் மார்க்-2 திட்டத்திலும் அவற்றை பயன்படுத்துவதன் மூலமாக காலவிரயத்தை தவிர்க்கவும் விஞ்ஞானிகள் எண்ணுகின்றனர்.
இந்திய விமானப்படை சுமார் 120 தேஜாஸ் மார்க்-2 Tejas Mark-2 நடுத்தர பல திறன் போர் விமானங்களை படையில் இணைக்க விரும்புகிறது அதாவது குறைந்தபட்சம் 6 படையணி Tejas Mk-2 விமானங்கள் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.