2032க்குள் Tejas Mk2 தேஜாஸ் மார்க்-2 விமானங்களை டெலிவரி செய்ய HAL திட்டம் !!

  • Tamil Defense
  • September 22, 2022
  • Comments Off on 2032க்குள் Tejas Mk2 தேஜாஸ் மார்க்-2 விமானங்களை டெலிவரி செய்ய HAL திட்டம் !!

HAL Hindustan Aeronautics Limited ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனமானது வருகிற 2032ஆம் ஆண்டுக்கு முன்னர் தேஜாஸ் மார்க்-2 Tejas Mk2 போர் விமானங்களை டெலிவரி செய்ய திட்டமிட்டு தயாரிப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

அதாவது 2026-2027 ஆண்டு வாக்கில் தேஜாஸ் மார்க்-2 விமானத்தின் சோதனைகளை நிறைவு செய்து தயாரிப்பு பணிகளை துவக்கி 2031-2032ஆம் ஆண்டு வாக்கில் இந்திய விமானப்படைக்கு ஆறு படையணிகள் அளவுக்கு அதாவது 108 விமானங்களை டெலிவரி செய்ய HAL தீவிரம் காட்டி வருகிறது.

2026-2027ஆம் நிதி ஆண்டு தயாரிப்பு பணிகள் துவங்கி அதே நிதியாண்டில் முதல்கட்ட டெலிவரி துவங்கும் எனவும் பின்னர் 2027-2028ஆம் நிதியாண்டில் இருந்து தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2031-2032ஆம் நிதியாண்டில் ஆறு படையணிகள் அளவிலான டெலிவரியை எட்டவும் அதற்கு தேஜாஸ் மார்க்-1 திட்டத்தை போலவே தேஜாஸ் மார்க்-2 திட்டத்திலும் ஆண்டுக்கு சுமார் 30 விமானங்கள் வரை தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.