இந்தியாவிலேயே முழுக்க முழுக்க வடிவமைத்து தயாரிக்கப்பட்ட இலகுரக தேஜாஸ் போர் விமானம் மலேசிய விமானப்படைக்கான முன்னனி பயிற்சி போர் விமான தேர்வில் கலந்து கொண்டுள்ளது.
தற்போது அந்த தேர்வில் முன்னனியில் இருப்பதாக கருதப்படும் தென் கொரிய FA-50 மற்றும் சீனாவின் JF-17 ஆகிய போர் விமானங்களுக்கு நமது HAL LCA TEJAS தேஜாஸ் கடுமையான சவால் விடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்கொரியா 18 KAI FA-50 விமானங்களுக்கு சுமார் 4.2 பில்லியன் மலேசிய ரிங்கிட் விலை நிர்ணயம் செய்து அறிக்கை அனுப்பிய நிலையில் மலேசிய அரசு அதனை 3.5 பில்லியன் ரிங்கிட் ஆக குறைக்குமாறு கோரி அறிக்கையை திரும்ப அனுப்பியுள்ளது.
இதன் காரணமாக தென்கொரியாவின் KAI FA-50 விமானத்தை மலேசியா வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் சீனாவின் 18 JF-17 போர் விமானங்களுக்கான விலை 3.4 பில்லியன் மலேசி ரிங்கிட் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் 3.5 பில்லியன் ரிங்கிட் மதிப்பீட்டை விடவும் குறைவாக இருந்தாலும் சீனா விமானத்தின் தரம், ரஷ்ய தயாரிப்பு என்ஜின், பராமரிப்பு சீரமைப்பு மேம்படுத்தல் போன்றவற்றை விடவும் இந்தியாவின் தேஜாஸ் ஆஃபர் சிறப்பாக உள்ளது.
இந்தியா 18 தேஜாஸ் விமானங்களுக்கு 3.75 பில்லியன் ரிங்கிட் என விலை வைத்துள்ளது, ஆனால் அமெரிக்க என்ஜின், அதிநவீன ஆயுதங்கள், விபத்தையே சந்திக்காத அளவுக்கு தரம் என பல சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
தென் கொரியாவின் KAI FA-50 2012ஆவது ஆண்டு முதல் இதுவரை ஆறு முறை விபத்துகளை சந்தித்துள்ளது, மேலும் அது சாதாரண பயிற்சி விமானம் தான் ஆகவே கனரக ஆயுதங்களை சுமக்கவும் முடியாது போன்ற பின்னடைவுகள் இதற்கு உள்ளன.
ஆனால் தேஜாஸ் போர் விமானமாகவே வடிவமைக்கப்பட்டது, பயிற்சி விமானமாகவும் பயன்படுத்தி கொள்ள முடியும், பிரம்மாஸ் போன்ற அதிநவீன கனரக ஏவுகணைகளை கூட சுமந்து சென்று போர் கப்பல்கள் மீது கூட தாக்குதல் நடத்த முடியும்.
கூடுதல் சிறப்பாக இந்தியா அளித்த ஆஃபரில் தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் மலேயாவிலேயே போர் விமான தயாரிப்பு, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் பணிமனை மற்றும் தொழிற்சாலை வசதி, மலேசிய Su-30 விமானங்களின் பராமரிப்பு ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.