TATA குழுமத்தின் ஒரு பிரிவான TASL – TATA Advanced Systems Limited VTOL – Vertical Takeoff and Landing செங்குத்தாக மேலேழும்பி தரை இறங்கும் ஆற்றல் கொண்ட உள்நாட்டிலேயே முழுவதும் வடிவமைத்து ஒரு Loitering Munition மிதவை குண்டை தயாரித்துள்ளது.
ALS – 50 என பெயரிடப்பட்டுள்ள இந்த மிதவை குண்டானது ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நடைபெற்ற சோதனைகளின் போது வெற்றிகரமாக தரையில் இருந்த இலக்கை தாக்கி அழித்துள்ளதாகவும் விரைவில் ராணுவத்தில் இந்த மிதவை குண்டு ஆயுதமானது இணைக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது அதிக உயர மலைப்பிரதேச பகுதிகள் மற்றும் மிகவும் கடினமான நிலப்பரப்பு கொண்ட பகுதிகளிலும் வெற்றிகரமாக இயங்கும் திறன் கொண்டது, இது நாட்டின் தனியார் துறை நிறுவனங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி எனவும் இந்த ஆண்டு ஆரம்பத்தில் லடாக்கில் நடைபெற்ற சோதனைகளும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த ASL -50 மிதவை குண்டில் தானாகவே இயங்கும் இலக்கை குறிவைக்கும் அமைப்பு ஒன்று உள்ளதாகவும் இதன் பயண தொலைவு மற்றும் எடை சுமக்கும் திறன்களை மேம்படுத்தி கொள்ள முடியும் எனவும் எதிர்காலத்தில் AI செயற்கை அறிவாற்றல் திறனையும் புகுத்தி கொள்ள முடியும் என கூறப்படுகிறது.
இத்தகைய மிதவை குண்டுகளின் விலை மிகவும் குறைவானது ஆனால் மிகவும் கடினமான இடத்தில் அமைந்துள்ள மிக மிக முக்கியமான இலக்குகளை இவற்றை கொண்டு அழிக்க முடியும் என்பது இவற்றின் சிறப்பாகும்.