அமெரிக்கா ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
அதன்படி அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், தென் கொரிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கிம் சூங் ஹான் மற்றும் ஜப்பான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அகிபா டகேயோ ஆகியோர் இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தின் தலைநகரான ஹோனலூலூ நகரில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத்தின் இந்தோ பசிஃபிக் கட்டளையகத்தின் தலைமையகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தைகளின் போது அமைதியான மற்றும் சுதந்திரமான இந்தோ பசிஃபிக் பிராந்தியம் மற்றும் தைவான் சீன இடையேயான பதட்டம் போன்ற மிகவும் முக்கியமான விவகாரங்கள் குறித்த விவாதம் நடைபெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.