அமெரிக்க ஹெலிகாப்டரில் பறக்க முயற்சித்து இறந்த தாலிபான்கள் !!
அமெரிக்க தலைமையிலான பன்னாட்டு படையினர் ஆஃப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் போது பல லட்சம் கோடிகள் மதிப்பிலான பல அதிநவீன ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை அங்கேயே விட்டு சென்றனர்.
அப்போது பலரும் இந்த ஆயுதங்கள் தாலிபான்கள் கையில் கிடைக்கும் போது தெற்காசிய பிராந்தியத்தில் மிகப்பெரிய பாதுகாப்பு சிக்கல் ஏற்படும் எனவும் குறிப்பாக தாலிபான்கள் தனிப்பட்ட முறையில் பயங்கர பலத்கை பெறுவார்கள் எனவும் கூறி வந்தனர்.
ஆஃப்கானிஸ்தானில் விட்ட செல்லப்பட்ட பல ஆயுதங்கள் பாகிஸ்தான் படைகளுக்கு சப்ளை செய்யப்பட்ட நிலையில் அவை இந்தியாவின் காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகளிடமும் அந்த ஆயுதங்கள் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆஃப்கன் தலைநகர் காபூலில் தாலிபான்கள் மேற்கொண்ட பயிற்சி ஒன்றின் போது ஒரு அதிநவீன Black Hawk ரக ஹெலிகாப்டரை இயக்கி மேலேழும்பிய தாலிபான்கள் தொடர்ந்து பறக்க முயற்சி செய்தனர் ஆனால் கட்டுபாட்டை இழந்து தரையில் விழுந்து வெடித்து சிதறியது.
இந்த விபத்துக்கு அனுபவமின்மை தான் காரணம் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர், இந்த விபத்தில் 3 தாலிபான்கள் கொல்லப்பட்டனர், ஆஃப்கன் பாதுகாப்பு அமைச்சகம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நிகழ்ந்ததாக அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆஃப்கானிஸ்தானில் பன்னாட்டு படைகள் சுமார் 7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை விட்டு சென்றனர், மேலும் ஆஃப்கன் பாதுகாப்பு படைகளுக்கு 16 ஆண்டுகளில் சுமார் 18.6 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் அளிக்கப்பட்டது.
விட்டு செல்லப்பட்ட ஆயுதங்களில் 923 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான விமானங்கள், 6.54 மில்லியன் மதிப்பிலான தரை தாக்குதல் ஆயுதங்கள், 40,000 ராணுவ வாகனங்கள், 3 லட்சம் பல்வேறு வகையான சிறிய ரக ஆயுதங்கள், இரவில் பார்க்கும் கருவிகள், கண்காணிப்பு, வழிகாட்டி கருவிகள் போன்றவை அடக்கம் என்பது கூடுதல் தகவல் ஆகும்.