க்ரைமியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மர்மமான உக்ரைனிய கடல்சார் ட்ரோன் !!

கடந்த 21ஆம் தேதி உக்ரைனிடம் இருந்து ரஷ்யா எடுத்து கொண்ட க்ரைமியா பகுதி கடற்கரை பகுதியில் ஒரு மர்மமான உக்ரைனிய ஆளில்லா படகு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவை பகுதியளவு நீரில் மூழ்கி பயணிக்கும் ஆற்றலை பெற்றிருக்கும் எனவும், இலக்கை நோக்கி மெதுவாக சென்று தான் சுமக்கும் வெடிமருந்தை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தும தற்கொலை தாக்குதல் ட்ரோன் ஆக இருக்கலாம் என பரவலாக கூறப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்னர் உக்ரைன் படைகளுக்கு ஆளில்லா கடல்சார் ட்ரோன்கள் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆளில்லா படகும் மேற்கத்திய நாடுகளால் உக்ரைனுக்கு வழங்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது, அதனை உறுதிப்படுத்தும் வகையில் அதில் ஆங்கில எழுத்துக்கள் காணப்படுகிறது.

இந்த ஆளில்லா படகை தொலைவில் இருந்து கேமிரா மற்றும் இதர கட்டுபாட்டு அமைப்புகள் மூலமாகவும் அல்லது செயற்கைகோள் மூலமாகவும் இயக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர், மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்கா தனத ஆயுதங்களை சோதிக்க உக்ரைன் ஏற்ற களமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.