இங்கிலாந்து அருகே பயணித்த ரஷ்ய கப்பல்கள் உச்சகட்ட உஷார் நிலையில் இங்கிலாந்து கடற்படை !!

  • Tamil Defense
  • September 8, 2022
  • Comments Off on இங்கிலாந்து அருகே பயணித்த ரஷ்ய கப்பல்கள் உச்சகட்ட உஷார் நிலையில் இங்கிலாந்து கடற்படை !!

ரஷ்ய கடற்படையின் ஸ்லாவா Slava ரக ஏவுகணை கப்பலான மார்ஷல் உஸ்டினாவ், உடலாய் Udaloy ரக நாசகாரி கப்பலான வைஸ் அட்மிரல் குலாகோவ், டேங்கர் கப்பலான வியாஸ்மா ஆகியவை மூன்றும் சமீபத்தில் இங்கிலாந்து அருகே பயணித்துள்ளன.

இதனை தொடர்ந்து உச்சகட்ட உஷார் நிலை உத்தரவு இங்கிலாந்து கடற்படைக்கு பிறப்பிக்கப்பட்டது அதையடுத்து இங்கிலாந்து கடற்படையின் Type 23 ரக ஃப்ரிகேட் ரக கப்பல்களான HMS WESTMINSTER வெஸ்மின்ஸ்டர், HMS LANCASTER லான்காஸ்டர், HMS RICHMOND ரிச்மன்ட் ஆகியவை மூன்று ரஷ்ய கப்பல்களையும் பின்தொடர்ந்தன.

மூன்று ரஷ்ய போர் கப்பல்களும் உக்ரைன் போருக்கு பிறகு கிழக்க மத்திய தரைக்கடல் பகுதியில் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு கடல்சார் உதவிகளை அளித்து கொண்டு இருந்தவை ஆகும் தற்போது மீண்டும் ரஷ்யா நோக்கி செல்வதாக கூறப்படுகிறது.

மூன்று ரஷ்ய போர் கப்பல்கள் மற்றும் அவற்றில் உள்ள ஹெலிகாப்டர்களை இங்கிலாந்து கடற்படை தனது சென்சார்கள் மற்றும் பல வகையான தொழில்நுட்பங்களை கெண்டு செல்டிக் கடல் மற்றும் ஆங்கில கால்வாய் பகுதிகளில் கண்காணித்து உள்ளதாக கூறப்படுகிறது.

இது பற்றி பேசிய HMS Westminster போர் கப்பலின் கட்டளை அதிகாரியான கமாண்டர் எட் மோஸ் வார்ட் ஐக்கிய இங்கிலாந்தை சுற்றியுள்ள கடல் பகுதிகளின் கடல்சார் பாதுகாப்பு எங்களின் அபிவிருத்தி மற்றும் உறுதிக்கு மிகவும் முக்கியமானது என்றார்.