இத்தாலி நாட்டு கடற்கரை அருகே தென்பட்ட ரஷ்ய நீர்மூழ்கி கப்பல் !!
1 min read

இத்தாலி நாட்டு கடற்கரை அருகே தென்பட்ட ரஷ்ய நீர்மூழ்கி கப்பல் !!

கடந்த சில மாதங்கள் முன்னர் ரஷ்யா தனது அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத தாக்குதல் நீர்மூழ்கி கப்பல் ஒன்றை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்புவதாக தகவல் வெளியானது, இந்த நிலையில் சமீபத்தில் ஒரு ரஷ்ய நீர்மூழ்கி கப்பல் இத்தாலி கடற்கரைக்கு அருகே தென்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த உறுதிப்படுத்தப்படாது தகவல்கள் ரஷ்ய கடற்படையின் வடக்கு பிராந்திய கடற்படை பிரிவின் கீழ் இயங்கும் ஆஸ்கார்-2 ரகத்தை சேர்ந்த K-266 ஒரெல் எனும் அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத தாக்குதல் நீர்மூழ்கி கப்பல் என கூறப்படுகிறது.

ஏற்கனவே மத்திய தரைக்கடல் பகுதியில் ரஷ்ய கடற்படையின் இரண்டு மேம்படுத்தப்பட்ட கிலோ ரக நீர்மூழ்கி கப்பல்கள் சிரியாவில் உள்ள கடற்படை தளம் ஒன்றில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன.

இத்தாலி கடற்கரை ஒரம் ரஷ்ய கடற்படையின் அணு ஆயுத தாக்குதல் நீர்மூழ்கி கப்பல் தென்பட்டு இருப்பது உக்ரைன் போரை முன்னிட்டு நேட்டோ நாடுகளுக்கு எதிராக ரஷ்யா மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.