உக்ரைனில் ரஷ்ய வீரர்களின் செயல் மிகப்பெரிய சவக்குழி கண்டுபிடிப்பு !!

  • Tamil Defense
  • September 19, 2022
  • Comments Off on உக்ரைனில் ரஷ்ய வீரர்களின் செயல் மிகப்பெரிய சவக்குழி கண்டுபிடிப்பு !!

உக்ரைனில் கார்கிவ் பகுதியில் உள்ள இஸ்யூம் எனும் ஊருக்கு அருகே ரஷ்ய படைகளிடம் இருந்து மீட்கப்பட்ட பகுதியில் மிகப்பெரிய சவக்குழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடீமீர் செலன்ஸ்கி அறிவித்துள்ளார்.

அடர்ந்த காட்டு பகுதியில் நூற்றுக்கணக்கான சவக்குழிகள் கண்டுபிடிக்க பட்ட நிலையில் அதற்கு சற்றே தொலைவில் ஒரு சவக்குழியில் 17-30 உக்ரைன் வீரர்களின் சடலங்கள் கண்டுபிடிக்க பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட நூற்றுக்கணக்கான சவக்குழிகளில் ரஷ்ய விமானப்படையின் குண்டுவீச்சில் கொல்லப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களின் உடல்கள் இருந்து கண்டுபிடிக்க பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தொடர்ந்து முறையான ஆய்வு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அந்த பகுதியில் ரஷ்ய படைகள் வெடிகுண்டுகளை பொறியாக வைத்து உள்ளனரா எனவும் உக்ரைன் படையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.