உக்ரைனில் பின்வாங்கும் ரஷ்ய படைகள்; குதுகலத்தில் உக்ரைன் அதிபர் !!

  • Tamil Defense
  • September 12, 2022
  • Comments Off on உக்ரைனில் பின்வாங்கும் ரஷ்ய படைகள்; குதுகலத்தில் உக்ரைன் அதிபர் !!

உக்ரைனுடைய கார்கிவ் முன்னனியில் இருந்து ரஷ்ய படைகள் பின்வாங்கி வரும் நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடீமீர் செலன்ஸ்கி குதுகலத்தில் இது தங்களது நாட்டுக்கு கிடைத்த வெற்றி என அறிவித்துள்ளார்.

முகநூல் கணக்கில் இதுபற்றி காணொளி வெளியிட்ட அவர் உக்ரைன் படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ரஷ்ய படைகள் பயந்து பின்வாங்கி வருவதாகவும், இது குறித்து இப்போதும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை முடித்து கொள்ளலாம் எனவும் அவர் பேசியுள்ளார்.

உக்ரைன் படைகள் சுமார் 2000 சதுர கிலோடமீட்டர் அளவிலான பகுதிகளை கார்கிவ் முன்னனியில் கைபற்றி உள்ளதாகவும் தற்போது கூட பல திசைகளில் முன்னேறி வருவதாகவும் ஆக்கிரமிப்பு செய்வோருக்கு உக்ரைனில் இடமில்லை எனவும் பேசியுள்ளார்.

இதற்காக 214ஆவது ரைஃபிள் பட்டாலியன், உக்ரைன் ராணுவ சிறப்பு படைகள், துணை ராணுவ சிறப்பு படைகள், காவல்துறை மற்றும் உளவுத்துறை ஆகியவற்றிற்கு உக்ரைன் அதிபர் வோலோடீமீர் செலன்ஸ்கி தனது நன்றிகளை தெரிவித்து கொண்டார்.