ஈரானிய ஆளில்லா விமானங்களை கொண்டு கடும் சேதம் ஏற்படுத்திய ரஷ்ய படைகள் அமெரிக்க ஊடகம் !!
1 min read

ஈரானிய ஆளில்லா விமானங்களை கொண்டு கடும் சேதம் ஏற்படுத்திய ரஷ்ய படைகள் அமெரிக்க ஊடகம் !!

பிரபல அமெரிக்க ஊடகமான WSJ Wall Street Journal கிழக்கு உக்ரைனில் நடைபெறும் சண்டையில் ரஷ்ய படைகள் ஈரானிய ஆளில்லா தற்கொலை தாக்குதல் விமானங்களை பயன்படுத்தி உக்ரைன் படைகள் மீது கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரைன் தரைப்படையின் 92ஆவது இயந்திரமயமாக்கப்பட்ட கமாண்டரான கர்னல் ரேடியோன் குலாகின் ஈரானிய ட்ரோன்களுக்கு ரஷ்ய வர்ணம் பூசப்பட்டு Geranium-2 ஜெரானியம்-2 என பெயர் சூட்டபட்டு பயன்படுவதாகவும்

கடந்த சில நாட்களாக உக்ரைனுடைய கார்கிவ் முன்னனியில் உள்ள உக்ரைன் படைகளுடைய நிலைகள் மீது இந்த வகை ஆளில்லா தற்கொலை தாக்குதல் விமானங்கள் அதிகளவில் பறக்க துவங்கி உள்ளதாகவும் ஏற்கனவே இரண்டு 152mm, இரண்டு 122mm பிரங்கிகள், BTR கவச வாகனங்கள் ஆகியவற்றை தாக்கி அழித்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசும்போது மற்ற பல பகுதிகளில் ரஷ்யர்களின் பிரங்கி படைகள் வலுவான நிலையில் இருப்பதாகவும் ஆனால் கார்கிவ் பகுதியில் பிரங்கி படைகள் வலுவழிந்து காணப்படும் நிலையில் அதனை சமாளிக்கவே ரஷ்ய படைகள் இந்த ஈரானிய ஆளில்லா தற்கொலை தாக்குதல் விமானங்களை பயன்படுத்தி வருவதாக WSJ ஊடகத்தினரிடம் தெரிவித்தார்.

பல பாதுகாப்பு துறை வல்லுனர்கள் ரஷ்ய படைகளின் ஈரானிய ஆளில்லா தற்கொலை தாக்குதல் விமானங்களின் பயன்பாடு உக்ரைன் படைகளுக்கு பெரும் ஆபத்தை விளைவித்து உள்ளதாகவும் களநிலவரத்தை மாற்றியமைத்து உக்ரைனுடைய திட்டங்களுக்கு பெரும் தடங்கல் ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறுகின்றனர்.

முன்னர் அமெரிக்க மன உக்ரைன் அரசுகள் ரஷ்ய படைகள் Shahed-136 எனும் ஈரானிய ஆளில்லா தற்கொலை தாக்குதல் விமானங்களை பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு வைத்தது குறிப்பிடத்தக்கது.