
உக்ரைனுடைய கார்கிவ் பகுதியில் உள்ள குபியான்ஸ்க் அருகே உக்ரைனிய படைகள் ரஷ்ய படைகள் பயன்படுத்தி வந்த Shahed-136 ஷாஹெத்-136 எனும் தற்கொலை தாக்குதல் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
சுட்டு வீழ்த்தப்பட்ட SHAHED-136 ஷாஹெத்-136 ஆளில்லா விமானத்தின் புகைப்படத்தை ஒரு உக்ரைனிய ராணுவ அதிகாரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் இதன் மூலம் ரஷ்யா ஈரானிய ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி வருவது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.
அமெரிக்க இங்கிலாந்து உளவு துறைகள் ரஷ்யாவுக்கு ஈரான் நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானங்களை விற்பனை செய்துள்ளதாக கூறிய நிலையில் ஈரான் அதனை மறுத்து அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.