ரஷ்யா உக்ரைன் படையெடுப்பில் பயன்படுத்தி கொள்ள வடகொரியாவிடமிருந்து பல லட்சம் ராக்கெட்டுகள் மற்றும் பிரங்கி குண்டுகளை வாங்கி வருவதாகவும் போர் அதிக நாள் நீடித்தால் மேலும் அதிக அளவில் வட கொரியாவிடம் இருந்து ஆயுதம் வாங்கும் நிலைக்கு ரஷ்யா ஆளாகும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வடகொரியாவிடம் இருந்து ரஷ்யா ஆயுதங்களை வாங்கி வருவது பற்றிய தகவலை முதல் முறையாக அமெரிக்க பத்திக்கையான New York Times செய்தி வெளியிட்டது, இதனை ரீட்விட் செய்த உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் “உக்ரைன் நேட்டோ நாடுகளின் நிலையை நோக்கி நகரும் போது ரஷ்யா வடகொரியாவின் நிலையை நோக்கி நகர்வதாக” நக்கலாக பதிவிட்டுள்ளது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மேற்கத்திய நாடுகளின் ஏதேச்சதிகார கொள்கைகள் தான் இந்த போருக்கு காரணம் எனவும் அமெரிக்கா தான் இதற்கு முக்கிய காரணம் எனவும் விமர்சனம் செய்து இருந்தார்.
இது தவிர வட கொரியா உக்ரைனில் இருந்து பிரிந்து சுதந்திரத்தை அறிவித்து கொண்ட