எண்ணெய் மற்றும் எரிவாயு குழாயை அழித்தது நீங்கள் தானா அமெரிக்காவை நோக்கி கேள்வி எழுப்பிய ரஷ்யா !!

ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மரியா ஸகரோவா ரஷ்யாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளை நோக்கி செல்லும் எரிபொருள் மற்றும் எரிவாயு குழாயை உடைத்தது அமெரிக்காவா எனும் கேள்விக்கு அதிபர் பைடன் பதில் அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் Nord Stream 1 மற்றும் Nord Stream 2 ஆகிய எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்களில் மூன்று பகுதிகளில் வெடிகுண்டு வைத்து தகரக்கப்பட சம்பவத்திற்கு பொறுப்பு அமெரிக்காவா இல்லையா என்பதற்கு பதிலளிக்க வேண்டும் என தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

குறிப்பாக கடந்த ஃபெப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நார்ட் ஸ்ட்ரீம் குழாய் திட்டம் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தால் நிச்சயமாக நிறுத்தப்படும் என பேசிய காணொளியையும் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.