தென் கொரியர்களை போன்று ஆடி பாடிய வட கொரிய வீரர்களுக்கு தண்டனை !!
1 min read

தென் கொரியர்களை போன்று ஆடி பாடிய வட கொரிய வீரர்களுக்கு தண்டனை !!

சமீபத்தில் வட கொரிய வீரர்கள் சிலர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பாட்டு பாடியும் ஆடியும் தங்களது திறன்களை வெளிபடுத்தினர் ஆனால் இது வட கொரிய அரசின் பார்வைக்கு சென்று பெரிய பிரச்சினையாகி உள்ளது.

அதாவது இந்த ஆடல் பாடல் தென் கொரிய பாப் கலாச்சாரம் போன்று மேற்கத்திய நாகரிக பழக்க வழக்கங்களை அடிப்படையாக கொண்டது எனவும் கூறி வடகொரிய அரசாங்கம் விசாரணை மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

வட கொரியாவில் மக்கள் இது போன்ற மேற்கத்திய நாகரிக பழக்க வழக்கங்களில் ஈடுபடாமல் தடுக்கும் ஒரு சட்டம் அமலில் உள்ளது அதன்படி மேற்கத்திய தாக்கம் கொண்ட நிகழ்ச்சிகளை பார்ப்பது, அது போன்ற செயல்களில் ஈடுபடுவது போன்றவை தண்டனைக்குரிய குற்றமாகும்.

மேற்குறிப்பிட்ட வீரர்கள் அனைவரும் வட கொரிய காவல்துறையின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் பணியாற்றி வருபவர்கள் ஆவார் ஆகவே சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்களே மீறியது பெரும் தவறு என வடகொரிய அரசு தெரிவித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட சட்டத்தின்படி குற்றம் நிருபிக்கப்பட்டால் மரண தண்டனை கூட விதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.