இந்திய விமானப்படையின் ப்ராஜெக்ட் சீட்டா; ட்ரோன்களை மேம்படுத்தும் திட்டம் ஒரு பார்வை !!

இந்திய விமானப்படை மேக் இன் இந்தியா மற்றும் ஆத்மநிர்பார் பாரத் ஆகிய திட்டங்களின் கீழ் தனது இஸ்ரேலிய தயாரிப்பு ஆளில்லா விமானங்களை இந்திய நிறுவனங்களை கொண்டு தாக்குதல் ட்ரோன்களாக மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு வைக்கப்பட்டுள்ள பெயர் தான் “Project Cheetah” ஆகும், இந்த திட்டத்தின் படி இஸ்ரேலிடம் இருந்து வாங்கப்பட்ட IAI HERON ஹெரோன் கண்காணிப்பு ட்ரோன்களில் அதிநவீன தகவல் தொடர்பு வசதிகள் மற்றும் ஏவுகணைகளை பொருத்தி மேம்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலில் இஸ்ரேலிய நிறுவனங்களை நாட முடிவு செய்திருந்த நிலையில் தற்போது இந்திய நிறுவனங்களிடம் இந்த பணியை ஒப்படைக்க உள்ளனர், ஆரம்பகட்டமாக விமானப்படையின் HERON ட்ரோன்கள் மேம்படுத்தப்படும் தொடர்ந்து இந்திய கடற்படை மற்றும் தரைப்படையின் HERON ட்ரோன்களும் மேற்கண்ட ரீதியில் மேம்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

இந்த திட்டத்தின் மூலமாக இந்தியாவின் முப்படைகளும் தங்களது கண்காணிப்பு, உளவு திறன்கள் மட்டுமின்றி தாக்குதல் திறன்களையும் பன்மடங்கு அதிகரித்து கொள்ள முடியும் என்றால் மிகையாகாது.