சீனா தைவான் மீது படையெடுத்தால் அமெரிக்க ராணுவம் சீனாவின் போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதிகளை தாக்கி அழிக்கும் என அமெரிக்க விமானப்படையின் துணை தளபதியான ஜெனரல் சாமுயெல் க்ளின்டன் ஹினவுட் கூறியுள்ளார்.
வாஷிங்டன் அட்லாண்டிக் கவுன்சிலில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் உக்ரைனில் கற்று கொண்டதை இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்
மேலும் சப்ளை நடப்பதற்கான உள்கட்டமைப்பு வசதிகளின் முக்கியத்துவத்தை நட்பு நாடுகள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும், இத்தகைய தீவிரமான சண்டையில் சப்ளை செய்வது மிகவும் கடினமாக இருக்கும் எனவும்
அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் இது பற்றி சிந்தித்து வருவதாகவும் சீனர்களின் உள்கட்டமைப்பு வசதிகளை தாக்கி அழிக்க வேண்டும் இதன்மூலம் சீன படைகள் தைவான் மீதான தாக்குதலை வெற்றிகரமாக நடத்துவதை முறியடிக்க முடியும் எனவும் பேசினார்.
சீனர்களும் இதை பற்றி நன்கு சிந்திக்க வேண்டும் தைவானை அவர்கள் எளிதாக தாக்கி விடலாம் என நினைத்தால் அவர்கள் அதனை வெற்றிகரமாக செய்ய நாம் அனுமதிக்க போவதில்லை நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்
அதன் மூலம் இந்த படையெடுப்பை மனித வரலாற்றில் மிகவும் கடினமான ராணுவ நடவடிக்கைகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் அதற்கான அனைத்து வசதி வாய்ப்புகளும் நம்மிடம் உள்ளது என கூறி தனது உரையை முடித்து கொண்டார்.