இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் Popular Front of India எனப்படும் பயங்கரவாத ஆதரவு அமைப்பு மற்றும் அதனுடைய 8 உட்பிரிவு அமைப்புகளை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பயங்கரவாத தொடர்புகள் மற்றும் ஆதரவு செயல்பாடுகள் காரணமாக தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
Rehab India Foundation,
Campus Front of India,
All India Imams Council,
National Confederation of Human Rights Organization,
National Women’s Front,
Junior Front,
Empower India Foundation, Rehab Foundation kerala ஆகிய மேற்குறிப்பிட்ட எட்டு உட்பிரிவு அமைப்புகளாகும்.
1967 UAPA சட்ட விரோத தடை செயல்கள் சட்டத்தின் மூன்றாவது பிரிவின் 1ஆவது இணை பிரிவு வழங்கும் அதிகாரத்தின்படி PFI மற்றும் இதர எட்டு அமைப்புகளும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளன.
PFI இயக்கமானது பயங்கரவாத நிதி திரட்டல், ஆதரவு, மூளைச்சலவை, ஆட்சேர்ப்பு, பயங்கரவாத இயக்கங்கள் உடனான தொடர்பு, சிரியா, ஈராக் மற்றும் ஆஃப்கானிஸ்தானில் பயங்கரவாத செயல்களில் நேரடி தொடர்பு , கொலை மற்றும் தாக்குதல்களை தூண்டி விடுவது, இதர மதத்தினர் மற்றும் அவர்களது நம்பிக்கைகளை இழிவு படுத்துவது, கொலை மிரட்டல் விடுப்பது, சமுகத்தின் அமைதியை சீர்குலைப்பது ஆகிய குற்ற செயல்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால் Popular Front of India அமைப்பின் அரசியல் பிரிவான SDPI Social Democratic Party of India தற்போதும் செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.