உக்ரைனுக்கு பிரங்கி குண்டுகளை சப்ளை செய்யும் பாகிஸ்தான் !!

கடந்த மாதம் பாகிஸ்தான் ஆயுதங்களை பிரிட்டிஷ் விமானப்படையின் C-17 போக்குவரத்து விமானம் மூலமாக ராவல்பிண்டி நகரில் அமைந்துள்ள நூர் கான் விமானப்படை தளத்தில் இருந்து ரகசியமாக அனுப்பி வைத்ததாக வந்த தகவலையடுத்து நாமும் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

தற்போது அந்த சந்தேகம் உண்மையாகி உள்ளது, அதாவது ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஈரான் வான் பகுதிகளை இந்த விமானம் பயன்படுத்தாமல் மாறாக மேற்கு ஆசியா அதாவது மத்திய கிழக்க நாடுகள் வழியாக சென்று மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள பிரிட்டிஷ் ராணுவ தளம் ஒன்றிற்கு சென்று அங்கிருந்து ரோமேனியா நாட்டில் உள்ள அவ்ராம் இயான்கு க்ளுஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு இந்த ஆயுதங்களை ஏற்றி பயணித்த பிரிட்டிஷ் விமானப்படை விமானம் சென்றுள்ளது.

இந்த ஆயுதங்கள் பிரங்கிகளுக்கான குண்டுகள் என கூறப்படும் நிலையில் சமீபத்தில் உக்ரைனிய வெளியுறவு அமைச்சர் டிமித்ரி குலேபா பாகிஸ்தானை மிகவும் பாராட்டி இருநாட்டு உறவுகளும் வளர்வதற்கு பல துறைகளில் மிகப்பெரிய அளவில் வாய்ப்பு உள்ளதாக கூறியது குறிப்பிடத்தக்கது.