பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து, சிறப்பு படை வீரர்கள் உட்பட ஆறு பேர் மரணம் !!
1 min read

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து, சிறப்பு படை வீரர்கள் உட்பட ஆறு பேர் மரணம் !!

நேற்று பாகிஸ்தான் ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று தென்மேற்கு மாகாணமான பலூச்சிஸ்தானுடைய ஹர்னாய் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியது.

இதில் ஹெலிகாப்டரில் இருந்த 2 விமானிகள், 2 தரைப்படை மேஜர் அந்தஸ்திலான அதிகாரிகள், 3 சிறப்பு படை வீரர்கள் உட்பட ஆறு பேர் மரணத்தை தழுவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் மற்றும் ஊடக தொடர்பு பிரிவான ISPR இந்த விபத்து மற்றும் மரணங்களை உறுதி செய்துள்ள நிலையில் விபத்திற்கான காரணத்தை பற்றிய விவரங்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.