வடகொரியா கிழக்கு கடல் பகுதியை நோக்கி அணு ஆயுத ஏவுகணை ஒன்றை எவ்வித முன் அறிவிப்பும் இன்றி ஏவி சோதனை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தென்கொரிய முப்படை தலைமை தளபதி, ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ஜப்பானிய கடலோர காவல்படை ஆகியோர் இந்த ஏவுகணை சோதனையை உறுதிப்படுத்தி உள்ளனர்.
ஜப்பான் கடலோர காவல்படை தனது நாட்டு கப்பல்கள் மற்றும் மீன்பிடி படகுகள் கவனமாக இருக்கும்படியும் ஏதேனும் தென்பட்டால் தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்திய நிலையில் ஏவுகணை ஜப்பான் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு வெளியே விழுந்ததாக அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு வடகொரியா இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு தொடர்ச்சியாக பல முறை அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் பலிஸ்டிக் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.