தற்போது நடைபெற்று வரும் துருக்கியின் மிகப்பெரிய ஏரோஸ்பேஸ், ஏவியேஷன் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியில் துருக்கியின் உலக புகழ்பெற்ற பெய்கார் ஆளில்லா விமான நிறுவனத்தின் நிறுவனர் ஹலூக் பைராக்தார் பேசினார்.
அப்போது அவரிடம் இந்தியாவுக்கு ஆளில்லா விமானங்கள் ஏற்றுமதி செய்யப்படுமா என கேட்டபோது அவர் நிச்சயமாக இல்லை எங்கள் நிறுவனம் போரில் ஆயுதங்களை இரு பக்கமும் விற்று சம்பாதிக்கும் கொள்கைக்கு எதிரான நிலைபாட்டை கொண்டுள்ளது.
நாங்கள் எங்களது சகோதர, நட்பு, நேட்டோ கூட்டமைப்பு நாடுகளுக்கு தான் ஆளில்லா விமானங்களை ஏற்றுமதி செய்வோம் குறிப்பாக பாகிஸ்தான், அஸர்பெய்ஜான், உக்ரைன் போன்ற நாடுகள் தான் எங்களுக்கு முக்கியம் என்றார்.
2018ஆம் ஆண்டு முதல்முறையாக கத்தாருக்கு ஏற்றுமதி செய்த பிறகு அஸர்பெய்ஜான், பாகிஸ்தான், துர்க்மேனிஸ்தான், உக்ரைன், எத்தியோப்பியா போன்ற நாடுகளுக்கு பெய்கார் நிறுவனம் தனது ஆளில்லா விமானங்களை ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.