
NIA National Investigation Agency எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பின் வரலாற்றில் முதல்முறையாக நாடு தழுவிய அளவில் NIA, ED – Enforcement Directorate எனப்படும் அமலாக்க துறை மற்றும் மாநில காவல்துறையினர் கூட்டாக இந்த சோதனைகளை நடத்தியுள்ளனர்.
தமிழ்நாடு கேரளா தெலுங்கானா உத்தர பிரதேசம் ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட சுமார் 10 மாநிலங்களில் நடைபெற்ற இந்த சோதனைகளில் PFI – Popular Front of India எனப்படும் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் பயங்கரவாத செயல்பாடுகளுக்கு நிதி திரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இஸ்லாமிய இளைஞர்களை மூளைச்சலவை செய்வது, போர் ற மதங்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்புவது, ஆயுத பயிற்சி அளிப்பது போன்ற பல்வேறு குற்ற செயல்களில் இந்த அமைப்பு ஈடுபட்டு வருகிறது, இந்த சோதனைகளில் ஆயுதங்கள், கணிணிகள், செல்போன்கள் போன்ற பல ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2006ஆம் ஆண்டு கேரளத்தில் செயல்பட்டு வந்த தேசிய மேம்பாட்டு முன்னனி, தமிழகத்தின் மனித நீதி பாசறை மற்றும் கர்நாடகத்தின் மரியாதைக்கான அமைப்பு ஆகிய மூன்றையும் இணைத்து PFI உருவாக்கப்பட்டது, முதலில் இந்த அமைப்பின் தலைமையகம் கேரளாவின் கோழிக்கோடு நகரில் தான் இருந்தது.
பின்னர் இஸ்லாமிய சமுகத்தின் பாதுகாவலராக நிலைநிறுத்தி கொண்ட இந்த அமைப்பானது அபரிமிதமான வளர்ச்சி அடைந்து இன்று 22 மாநிலங்களில் இயங்கி வருகிறது, தலைமையகத்தையும் நாட்டின் தலைநகர் தில்லிக்கு மாற்றி கொண்டது, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தான் இந்த அமைப்புக்கு அதிக அளவில் நிதி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.