குஜராத்தில் NIA ரெய்டு கைப்பற்றப்பட்ட முக்கிய ஆதாரங்கள் !!
குஜராத் மாநிலம் நாதியாத் நகரத்தில் அமைந்துள்ள புதிய பாரதம் ஹிஞ்ச் சப்ளையர்களுடைய கிருஷ்னா ஹிஞ்ச் அலுவலகத்தில் தேசிய விசாரணை முகமை ரெய்டு நடத்தியது.
பயங்கரவாத நிதியுதவி தொடர்பான வழக்கில் சந்தேகத்தின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது, புதிய பாரதம் நிறுவனத்தின் உரிமையாளர் ஆஸ்மா கான் பதான் என்பவர் ஆவார்.
ஆஸ்மா கான் பதான் தில்லி வக்பு வாரியத்தின் உறுப்பினர் ஆவார் மேலும் இவர் ஒரு முன்னாள் கவுன்சிலர், நாதியாத் நகரில் உள்ள அம்தாவாடி பஜார் ஷக்கார்குய் பகுதியில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
திங்கட்கிழமை நடத்தப்பட்ட இந்த சோதனை சுமார் 7.5 மணி நேரம் நீடித்தது அதாவது மாலை 3.30 மணி வரை நடைபெற்ற இந்த சோதனைக்கு அந்த மாவட்ட குற்றப்பிரிவு புலனாய்வு காவல்துறை அதிகாரிகளும் உதவியாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.