முன்னனி DRDO விஞ்ஞானிக்கு முக்கியமான புதிய பொறுப்பு !!

  • Tamil Defense
  • September 6, 2022
  • Comments Off on முன்னனி DRDO விஞ்ஞானிக்கு முக்கியமான புதிய பொறுப்பு !!

ATAGS Advanced Towed Artillery Gun System எனப்படும் உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட அதிநவீன இழுவை பிரங்கி அமைப்பை உருவாக்கிய குழுவின் தலைவராக பணியாற்றியவர் தான் ஷைலேந்திரா வி காடே.

மிகச்சிறந்த விஞ்ஞானியான இவருக்கு தற்போது DRDO வின் ACE Armament aand Combat Engineering Sysyems அதாவது ஆயுதங்கள் மற்றும் சண்டை பொறியியல் அமைப்புகள் பிரிவின் இயக்குனர் ஜெனரல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது, இந்த ACE யின் கீழ் 9 முக்கிய ஆய்வகங்கள் உள்ளன.

அவற்றில் குறிப்பிடத்தக்கவை ARDE ஆயுதங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, HEMRL உயர் சக்தி பொருட்கள் ஆராய்ச்சி ஆய்வகம், R & DE (E) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு (பொறியியல்) ஆகியவை ஆகும்.

இவர் பினாகா பலகுழல் ராக்கெட் லாஞ்சர்களை உருவாக்கும் திட்டத்தில் பணியாற்றியுள்ளார் அதில் சிறப்பாக பணியாற்றியதால் சிறந்த செயல்பாட்டுக்கான விருதை பெற்றார், மேலும் பலமுறை பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

ATAGS, FICV Gun System, அர்ஜூன் உட்பட பலவகை டாங்கிகளுக்கான வெவ்வேறு விதமான குண்டுகள் போன்றவை இவரது தலைமையிலான குழுக்களால் உருவாக்கப்பட்டவை ஆகும் குறிப்பாக FICV வாகனத்தின் துப்பாக்கி உலகிலேயே முதல்முறையாக இரண்டு வகையான குண்டுகளை சுடக்கூடிய விதமாக உருவாக்கப்பட்டு உள்ளது.

இது தவிர அவர் மஹராஷ்டிரா மாநிலம் அஹமேத்நகரில் உள்ள VRDE அமைப்பின் இயக்குனராக பணியாற்றினார் அப்போது WhaP, IPMV, CBRN – Tracked, CBRN – WhaP, 180 குதிரை சக்தி என்ஜின், UGV ஆளில்லா வாகனம் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி நடத்தியுள்ளார்.

அதே போல ARDEயின் SAG சிறு ஆயுதங்கள் பிரிவின் இயக்குனராக பணியாற்றிய போது JVPC, UBGL, MCIWS, ABG, INSAS மேம்பாட்டு திட்டம் மற்றும் F – INSAS போன்ற முன்னனி திட்டங்களையும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து முன்னின்று நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

IIT Delhi மற்றும் IIT Bombay ஆகிய கல்லூரிகளில் பயின்ற காடே அவர்கள் 40 க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் சர்வதேச ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளார், சர்வதேச அளவில் பிரங்கி மற்றும் காலாட்படை தொடர்பான கருத்தரங்குகளில் கலந்து கொண்டு பேசியுள்ளார், தற்போதும் நாட்டின் மிக முக்கிய திட்டங்களை பலவற்றை முன்னின்று நடத்தி வருகிறார் என கூறப்படுகிறது.