பயிற்சிக்கு செல்லும் புதிய ரஷ்ய ராணுவ வீரர்கள் !!

2014ஆம் ஆண்டு உக்ரைனிடம் இருந்து பிரித்து எடுத்துக்கொண்ட க்ரைமியா மாகாணத்தில் கட்டாய ஆட்சேர்ப்பில் இணைந்த புதிய ரஷ்ய ராணுவ வீரர்கள் பயிற்சி பெற ராணுவ முகாம்களுக்கு சென்றுள்ளனர்.

புதிய வீரர்களை வழியனுப்பி வைக்கும் விழாவில் வீரர்களை அவர்களது குடும்பத்தினர் ரஷ்ய தேசிய கொடியை அசைத்து கண்ணீர் மல்க அனுப்பி வைத்தனர்.

புதிய வீரர்களும் தங்களது ஆயுதங்களை பெற்று கொண்டு தங்களது குடும்பத்தினருக்கு பிரியாவிடை அளித்து தங்களது ராணுவ முகாம்களை நோக்கி சென்றனர்.