இந்திய விமானப்படை ஆறு படையணிகள் அளவிலான தேஜாஸ் மார்க்-2 Tejas Mk2 ரக போர் விமானங்களை படையில் இணைக்க உள்ளதாக உறுதி அளித்துள்ளது அதாவது ஒரு படையணிக்கு 18 விமானங்கள் வீதம் 6×18 = 108 விமானங்கள் சேர்க்கப்பட உள்ளன.
ஆனாலும் ஒய்வு பெற உள்ள ஜாகுவார் SEPECAT Jaguar, மிராஜ்-2000 Mirage 2000 மற்றும் மிக்-29 MIG-29 ரக விமானங்களின் வெற்றிடத்தை நிரப்ப இவை போதுமானது அல்ல ஆகவே கூடுதல் தேஜாஸ் மார்க்-2 விமானங்கள் வாங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆகவே இரண்டாவது தொகுதியில் மேலும் கூடுதலாக 3 – 4 படையணிகள் அளவிலான சுமார் 54 முதல் 72 தேஜாஸ் மார்க் -2 போர் விமானங்கள் வாங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த இரண்டாவது தொகுதி தேஜாஸ் மார்க்-2 போர் விமானங்கள் சற்றே மேம்படுத்தப்பட்டவை ஆக இருக்கும் இவை Advanced AEA Airborne Electronic Attack திறன் கொண்டவையாக வடிவமைக்கப்படும் இந்த வகை விமானங்களுக்கு அதிக சக்தி வாய்ந்த என்ஜின் தேவைப்படும்.
எனவே இவற்றிற்காக DRDO வின் ஒரு பிரிவான GTRE Gas Turbine Research Eastablishment ஒரு சக்திவாய்ந்த 110 கிலோ நியூட்டன் திறன் கொண்ட என்ஜினை வடிவமைத்து தயாரிக்க உள்ளது.
இதே என்ஜின் இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமான ஆம்காவின் மார்க்-2 AMCA Mk2 ரகத்திலும் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புதிய 110 கிலோ நியூட்டன் திறனை வெளிப்படுத்தும் என்ஜின் 2035ஆம் ஆண்டில் தான் தயாரிப்பு நிலையை எட்டும் அப்போது தான் மேற்குறிப்பிட்ட இரண்டு விமானங்களின் மார்க்-2 ரகங்களும் தயாராகும் அதுவரை ADA வானூர்தி மேம்பாட்டு முகமை காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.