இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான HAL எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்திய கடற்படையின் Mig-29K/KUB போர் விமானங்களுக்கு ஒரு புதிய கணிணி அமைப்பை தயாரித்து வருகிறது.
இந்த புதிய கணிணி அமைப்பானது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைத்து தயாரிக்கப்படுவதாகும், இந்த புதிய அதிநவீன கணிணி அமைப்புகள் மூலமாக இந்த விமானங்களின் திறன் பன்மடங்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
குறிப்பாக இந்திய தயாரிப்பு மற்றும் மேற்குலக நாடுகளிடம் இருந்து வாங்கப்படும் ஆயுதங்களை இந்த ரஷ்ய தயாரிப்பு போர் விமானங்களுடன் இணைத்து பயன்படுத்துவது மிகவும் எளிதான காரியம் ஆகி விடும், இதனால் இந்திய கடற்படை பல்வேறு வகையான நடவடிக்கைகளை தைரியமாக முன்னெடுக்க முடியும்.
தற்போது இந்த ரஷ்ய Mig-29 K/ KUB ரக போர் விமானங்களில் ரஷ்ய ஆயுதங்களை மட்டுமே இணைத்து பயன்படுத்தும் நிலை உள்ளது இதன் காரணமாக வான் தாக்குதல் மற்றும் தரை தாக்குதல் நடவடிக்கைகளில் சற்றே பின்னடைவை ஏற்படுத்தியது, மேலும் ரஷ்யா இந்த கணிணி அமைப்புகளை மேம்படுத்தி தரவும் சுயமாக மேம்படுத்துவதற்கான அனுமதியை தரவோ மறுத்து வந்தது.
தற்போது இந்த புதிய கணிணி அமைப்பின் ஜூன் மாதம் முதல் நடைபெற்று வருவதாகவும் ஏறத்தாழ எட்டு மாதங்கள் நடைபெறும் இந்த அமைப்பு தேஜாஸ் மார்க்-2 விமானத்திற்கு முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட கணிணி அமைப்பை அடிப்படையாக கொண்டது எனவும் கூறப்படுகிறது.
இந்திய கடற்படையின் Mig-29 K/KUB ரக போர் விமானங்களில் இந்த புதிய அதிநவீன சுதேசி கணிணி அமைப்பு இணைக்கப்பட்ட பிறகு முதல்கட்டமாக சுதேசி ஆயுதங்களான அஸ்திரா மற்றும் ரூத்ரம் பின்னர் பிரிட்டிஷ் தயாரிப்பு ASRAAM ஏவுகணைகள் விமானங்களில் இணைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.