கடந்த இரண்டு ஆண்டுகளில் பஞ்சாப் மற்றும் காஷ்மீர்
மாநிலங்களை ஒட்டிய எல்லையோர பகுதிகளில் சுமார் 200க்கும் அதிகமான முறைகள் பாகிஸ்தானிய ஆளில்லா விமானங்கள் ஊடுருவி பிரச்சினை ஏற்படுத்தியுள்ளன, எல்லை பாதுகாப்பு படையினர் அவ்வப்போது இவற்றை சுட்டு வீழ்த்தி வந்தனர்.
இந்த நிலையில் நவீனமயமாக்கல் நடவடிக்கைகளின் ஒருபகுதியாக எல்லை பாதுகாப்பு படைக்கு உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட அதிநவீன ஆளில்லா விமான எதிர்ப்பு துப்பாக்கியை வழங்க முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் தற்போது தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் NTRO – National Technical Research Organisation ஆளில்லா விமானங்களை முடக்குவதற்கான அலைவரிசைகளை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் BSF இணைத்துள்ள இந்த துப்பாக்கிகளை கையில் வைத்தும் வாகனங்களில் இணைத்தும் பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது.