இந்திய ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்புகள் மீது ஆர்வம் காட்டும் 5-6 நாடுகள் !!

BDL Bharat Dynamics Limited பொதுத்துறை நிறுவனத்தின் தலைமை மேலாண் இயக்குனர் கமோடர் சித்தார்த் மிஷ்ரா சமீபத்தில் Zee Business தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.

அப்போது இந்திய பாதுகாப்பு அமைச்சகம் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பை சுமார் 9 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்துள்ளதாகவும்,

தற்போது அவற்றில் ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்புகள் மீது ஐந்து முதல் ஆறு நாடுகள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் அந்த நாடுகளுடன் BDL பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என நம்பிக்கை தெரிவித்த அவர் சில நாடுகள் இந்த ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்புகளை தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் தங்களது நாட்டிலேயே தயாரிக்க விரும்புவதாகவும் கூறினார்.

BDL நிறுவனம் சர்வதேச ஆயுத சந்தையில் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட Amogha-3 அமோகா-3 மற்றும் HELINA ஹெலினா டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளையும் விற்பனைக்கு முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.