ஓய்வு பெற உள்ள க்ரூப் கேப்டன் அபிநந்தன் அவர்களுடைய மிக்-21 படையணி !!
கடந்த 2019ஆம் ஆண்டு ஃபெப்ரவரி 27 அன்று இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் விமானப்படை போர் விமானங்களை விரட்டி அடித்ததோடு மட்டுமின்றி தனது Mig-21 வைத்து ஒரு பாகிஸ்தான் F-16 விமானத்தை க்ரூப் கேப்டன் அபிநந்தன் வீழ்த்தினார்.
இவர் இந்திய விமானப்படையின் 51ஆவது போர் விமான படையணியில் பணியாற்றி வந்தார் இந்த படையணி Mig-21 விமானங்களை இயக்கி வருகிறது, வருகிற செப்டம்பர் 30 அன்று சுமார் 35 ஆண்டுகள் சேவைக்கு பிறகு இந்த படையணி ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு மூத்த இந்திய விமானப்படை அதிகாரி இது பற்றி பேசும் போது இந்த படையணியை தவிர்த்து மேலும் உள்ள மற்ற மூன்று Mig-21 போர் விமான படையணிகள் 2025ஆம் ஆண்டு வாக்கில் இந்திய விமானப்படையில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்தார்.
க்ரூப் கேப்டன் அபிநந்தன் வர்த்தமான் தற்போது ஒரு ரஃபேல் போர் விமானியாக உள்ளார் என்பதும் தனது வீர தீர செயலுக்காக போர் காலத்தில் வழங்கப்படும் மூன்றாவது உயரிய வீரதீர விருதான வீர் சக்ரா வழங்கி கவுரவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.