அக்டோபர் 3 படையில் இணையும் முதலாவது சுதேசி இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர் !!

  • Tamil Defense
  • September 18, 2022
  • Comments Off on அக்டோபர் 3 படையில் இணையும் முதலாவது சுதேசி இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர் !!

வருகிற அக்டோபர் மாதம் 3ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமானப்படை தளத்தில் நடைபெற உள்ள விழாவில் இந்திய விமானப்படையில் முதலாவது இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர் சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் LCH- Light Combat Helicopter முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்டவை ஆகும், கடல்மட்டத்திற்கு மேலே சுமார் 16,000 அடி உயரம் கொண்ட மலை பகுதியில் கூட மேலேழும்பி தரை இறங்கும் திறன் கொண்ட உலகின் முதல் தாக்குதல் ஹெலிகாப்டர் ஆகும்.

இந்த ஹெலிகாப்டர்களை சண்டை மற்றும் தேடல் CSAR, எதிரி வான் பாதுகாப்பு அமைப்புகளை அழித்தல் DEAD, பயங்கரவாத எதிர்ப்பு CI, ட்ரோன் எதிர்ப்பு , பதுங்கி குழி அழிப்பு, CAS அருகிலிருந்து பாதுகாப்பு அளித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள பயன்படுத்தி கொள்ள முடியும் என கூறப்படுகிறது.

இந்த வகை ஹெலிகாப்டர்கள் நன்கு பார்க்க உதவும் Full Glass Cockpit, Composite உடல்பகுதி, அனைத்து காலநிலை மற்றும் இரவிலும் பகலிலும் இயங்கும் திறன், அதிக செயல்திறன், வேகம் உள்ளிட்ட திறன்களை தன்னகத்தே கொண்டவை என்பதும் இந்திய விமானப்படை மற்றும் தரைப்படை ஆகியவற்றின் தேவைகளை சந்திக்க மிகப்பெரிய அளவில் உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல்கட்டமாக 15 ஹெலிகாப்டர்களை 4244 கோடி ரூபாய் மதிப்பில் வாங்க அரசு ஒப்புதல் அளித்த நிலையில் அவற்றில் 10 விமானப்படைக்கும், 5 தரைப்படைக்கும் என ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது, மேலும் இரண்டு படைகளும் விரும்பினால் ஆண்டுக்கு 30 வீதம் மொத்தமாக 150 இத்தகைய ஹெலிகாப்டர்களை தயாரித்து தர முடியும் என HAL அறிவித்துள்ளது கூடுதல் தகவல் ஆகும்.