ஆசிய சந்தைக்கு இந்திய தனியார் நிறுவனமான Larsen & Toubro தனது இடைத்தர நீர்மூழ்கி கப்பலான SOV-400 ஐ ஆஃபர் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த SOV-400 ரக நீர்மூழ்கி கப்பல்களை ஆசியாவை சேர்ந்த பெரிய பாதுகாப்பு பட்ஜெட் இல்லாத சிறிய நாடுகளின் கடற்படைகள் வாங்கி தங்களது கடல்பரப்பை மட்டும் பாதுகாக்க பயன்படுத்தி கொள்ள முடியும்.
இந்த SOV-400 வெறுமனே 550 டன்கள் எடையை கொண்டதாகும், 533 மில்லிமீட்டர் அளவு கொண்ட கனரக நீரடிகணைகள் அல்லது 10 சிறப்பு படை வீரர்கள் அல்லது தலா 4 வீரர்கள் பயணிக்க கூடிய 2 SDV எனப்படும் நீரடி வாகனங்கள் ஆகியவற்றை சுமந்து செல்லும்.
இது தவிர இந்த SOV-400 ரக நீர்மூழ்கி கப்பல்களில் அதிநவீன சோனார், ரேடியோ மின்னனு சென்சார்கள் ஆகியவை இருக்கும் இவற்றை கொண்டு கண்காணிப்பு, கண்டுபிடித்தல், தகவல் தொடர்பு, ரோந்து உள்ளிட்ட பணிகளை திறம்பட மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.