ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச காவல்துறையின் டிஜிபியான தில்பாக் சிங் சமீபத்தில் ஜம்மு நகரில் நடைபெற்ற வருடாந்திர காவல்துறை குற்ற புள்ளிவிவரங்கள் ஆய்வில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கடந்த மூன்று வருடங்களில் காஷ்மீரின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாகவும், பந்த் கலாச்சாரம் முற்றிலும் ஒழிந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசும்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க நன்கு திட்டமிடப்பட்ட ஒரு இறுதிகட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை துவங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி பேசினார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் அனைத்து மூத்த காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர் அவர்களிடம் பயங்கரவாதத்தை ஒழிக்க ரோந்து கண்காணிப்பு விசாரணை போன்ற திறன்களை சிறப்பான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என டிஜிபி தில்பாக் சிங் கேட்டு கொண்டார்.