கொச்சி நகரில் உள்ள இந்திய கடற்படையின் கப்பல் பராமரிப்பு பணிமனையில் சுமார் 230 Apprentice காலி பணி இடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகி உள்ளது.
அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 10ஆம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது தகுந்த ITI பாடப்பிரிவில் 65% மதிப்பெண்களுடன் அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
அதிகபட்ச வயது வரம்பு 21 ஆகும், சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு வயது வரம்பு தளர்ச்சி அளிக்கப்படும், விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அஞ்சல் வழியாக அனுப்பி வைக்க வேண்டும்,அனுப்ப வேண்டிய முகவரி;
The Admiral Superintendent (for Officer-in-Charge),
Apprentices Training School, Naval Ship Repair Yard,
Naval Base, Kochi- 682004
இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://indiannavy.nic.in/ அணுகி விரிவான தகவல்களை பெற்று ஆர்வமும் தகுதியும் உடையோர் விண்ணபிக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.