ஆம்கா மற்றும் அடுத்த தலைமுறை தாக்குதல் நீர்மூழ்கி தயாரிக்க இந்தியாவுக்கு உதவ தயார் ஜப்பான் !!

கடந்த இரண்டு நாட்களாக இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு தொழில்துறை இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன, இது இரு தரப்பு பாதுகாப்பு துறை ஒத்துழைப்பினை அதிகரிக்கும் நோக்கத்தோடு நடத்தப்படும் நிகழ்ச்சி ஆகும்.

மேற்குறிப்பிட்ட இரு தரப்பு பேச்சுவார்த்தைகளின் முடிவில் தற்போது இந்தியா மற்றும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகங்கள் பல்வேறு திட்டங்களில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் ஜப்பான் மேக் இன் இந்தியா திட்டத்தில் பங்குதாரர் ஆக விரும்புவதாகவும் அதன் மூலமாக இந்தியாவிலேயே கூட்டாக இணைந்து மேம்பாடு வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ள விரும்புவதாக இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் சதோஷி சூஸூகி தெரிவித்தார்.

மேலும் பேசும்போது இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை ஆம்கா AMCA திட்டம், போர் கப்பல்கள் மற்றும் அடுத்த தலைமுறை தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களை கட்டும் திட்டங்கள் ஆகியவற்றில் இணைந்து செயல்பட விரும்புவதாகவும் பேசினார்.

ஏற்கனவே இந்தியாவின் BEL மற்றும் ஜப்பானுடைய Toshiba ஆகியவை நீர்மூழ்கி கப்பல்களுக்கான லித்தியம் ஐயான் பேட்டரிகள், BEL மற்றும் Jupiter Corporation ஆகியவை இணைந்து ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள்,

மேலும் ஆளில்லா வாகனங்கள், ரோபோட்டுகள், நீரடி தகவல் தொடர்பு, கப்பல் வடிவமைப்பு, உளவு தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை கூட்டாக தயாரிக்க பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.