அரபு நாடு ஒன்றிற்கு ஆயுதம் விற்பனை செய்த இஸ்ரேல் !!

  • Tamil Defense
  • September 26, 2022
  • Comments Off on அரபு நாடு ஒன்றிற்கு ஆயுதம் விற்பனை செய்த இஸ்ரேல் !!

இஸ்ரேல் அரேபிய நாடான ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE – United Arab Emirates) SPYDER வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் Derby, Python வானிலக்கு ஏவுகணைகளை விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலக புகழ்பெற்ற ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மேற்குறிப்பிட்ட இரண்டு ஆயுத அமைப்புகளின் வியாபாரம் பற்றிய செய்தியை வெளியிட்டுள்ள நிலையில்,

இரண்டு நாடுகளுக்கும் இடையே ஆளில்லா விமான இஸ்ரேலிய எதிர்ப்பு அமைப்புகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்து ஆகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.